Search Here For More Information

புதிய தலைமுறை - புதிய இதழ்

புதிய இதழ், விற்பனைக்கு அல்ல தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு தபாலில் வந்திருந்தது.வார இதழா? மாத இதழா? என்ற எந்தக் குறிப்பும் இல்லை. விமர்சனத்தையும் வரவேற்பையும் பொறுத்து விலை மற்றும் கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டுரையே வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்! என்று அசத்தலாக இருந்தது. சாய்னா நெஹ்வால் (மேட்மின்ட்டன்), இளவழகி (கேரம்), மித்தாலி ராஜ் (கிரிக்கெட்), தீபிகா & ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), ஷாமினி (டேபிள் டென்னிஸ்) போன்ற விளையாட்டில் சாதனைப் படைத்த பெண்களைப்பற்றிய கவர் ஸ்டோரி. ஜி. கோமளா என்பவர் இதனை எழுதியுள்ளார்.

”உதவி காத்திருக்கு” என்ற பகுதியில் ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற ஆனால் கல்வி கற்பதில் ஆர்வமிருந்தும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு அரசும் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து உதவிகள் செய்ய முன்வந்திருப்பதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலதிக விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்க்கவும். தொலைபேசி இலக்கங்கள் : 9900906338.

"எஞ்சினியரிங் கவுன்சலிங்" - கவுன்சலிங் என்றால் என்ன? அதை கிராமப்புற மாணவர்கள் எப்படி அணுகுகிறார்கள், தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து தரப்படுகின்றது என்று பதிவர் ஆதிஷா மற்றும் யுவன்கிருஷ்ணா எழுதி இருக்கிறார்கள்.

அடுத்து "வாமணன் திரைப்படம் பற்றிய விமர்சனம்" என்பதால் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன்.

"கேள்வி நேரம்" என்ற பகுதியில் இயக்குனர் சீமானுடன் சென்னை லயோலாக் கல்லூரி ஊடகக் கலை மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக ஊடக மற்றும் மார்க்கெட்டிங் துறை மாணவர்களும் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் சலிக்காமல் பதிலளித்துள்ளார்.கவின் மலர் இதனைத் தொகுத்துள்ளார்.

அடுத்து "கடவுள் எங்கே இருக்கிறார் - மின்னஞ்சலில் வந்த சிந்தனை" என்ற பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. அப்துல் கலாம் - அவருடைய கல்லூரி நாட்களில் வகுப்பு பேராசிரியருடன் நடத்திய உரையாடல். ரிஷிகுமார் மூலம் இந்த ஆன்மீக உரையாடல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

"எச்சரிக்கை ஆபத்து நெருங்குகிறது" என்ற பகுதியில் இந்திய இளைஞர்களின் சக்கரைக் குறைபாடு விகித அதிகரிப்பும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய துணுக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

"பைக் வாங்குவது எப்படி?" - இருசக்கர வாகனகளை வாங்கும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பகுதியில் இருக்கிறது.

அடுத்துள்ள கவிதைப் பகுதியில் பதிவர் மற்றும் பகுதி நேர நிரூபர் உமாஷக்தி அவர்களின் "புத்தரும் நானும்" கவிதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

பொதுவாக வார, மாத இதழ்களின் நடுப்பக்கங்கள் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களால் அலங்கரிக்கப்படும். இந்த இதழில் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தை காஷ்மீரின் ஷேக் அப்துல்லா - ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவிலிருந்து, தமிழ்நாட்டில் கலைஞர் - ஸ்டாலின் -அழகிரி - கனி மொழி வரை இந்திய அரசியல் தலைவர்களின் ஜனநாயக விரோத செயலை விளக்குமாறு படத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.

"பைக்கில் ஒரு பயணம்" - நீலாங்கரை அடுத்துள்ள ஆலம்பறா கோட்டை பற்றிய கட்டுரை.

"கோடம்பாக்கத்தில் சுனாமி" - தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் பாய்ச்சல் என்ற கட்டுரை கிராமத்திலிருந்து வந்து தற்போது நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பாண்டியராஜன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, மற்றும் நாடோடிகள் சசிகுமார் பற்றிய சினிமா கட்டுரை. அழகாக எழுதி இருக்கிறார்கள்.

"அச்சத்தை வென்றது எப்படி?" - கவிஞர் வைரமுத்துவின் முதல் மேடைப் பேச்சையும், அதில் அவர் பட்ட கஷ்டங்களையும் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல பேச்சாளர் ஆனதையும் குறித்த அருமையான கட்டுரை.ஒவ்வொரு இதழிலும் சிறந்த ஆளுமைகளின் அனுபவங்கள் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து அருணா ஸ்ரீனிவாசின் "நிறைவு" சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

"தவறு செய்தவர் ஆசிரியர் - தண்டனை அனுபவிப்பது மாணவன்!" பகுதியில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவால் எந்த சலுகைகளையும் பெற முடியாமல், அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கும் மாணவரைப் பற்றிய கட்டுரை.

எல்லாமே ஓசி - இ-கலப்பை மென்பொருள் பற்றிய விளக்கக் கட்டுரை.

புத்தக அறிமுகம் (தமிழ் மொழி) - "எங்கே எனது அல்வாத் துண்டு?" கே.ர மணி மொழிபெயர்த்த பிரசித்தி பெற்ற Who moved mycheese? புத்தகத்தைப் பற்றிய பரிந்துரை என அசத்தியுள்ளார்கள்.

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பத்திரிகைத் துறையில் செயல்பட விரும்புவோர் புதிய தலைமுறை இதழினை அணுகலாம். திரு மாலன் அவர்களின் பத்திரிகைப் பணி அழைக்கிறது என்ற பதிவில் அதற்கான அறிவிப்பு இருக்கிறது.

புதிய தலைமுறை வெற்றியின் உச்சியைத் தழுவ வாழ்த்துக்கள்.

படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்க ஓர் வாய்ப்பு

படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்க ஓர் வாய்ப்பு
புதிய தலைமுறை வழங்குகிறது


- பணம் சம்பாதிக்க விருப்பம். ஆனால் படிப்பை விட முடியாது
- மார்க்கெட்டிங் செய்யும் திறமை உண்டு. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை

இதுதான் உங்கள் பிரசினையா?

முயற்சி, உழைப்பு, விற்பனை செய்யும் திறன் கொண்ட இளைஞர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் அவர்கள் வசிக்கும் ஊரிலேயே பகுதி நேரமாகப் பொருளீட்டும் வாய்ப்பினை புதிய தலைமுறை வழங்குகிறது.


உங்கள் வருமானம் உங்கள் முயற்சியையும் அதில் நீங்கள் ஈட்டும் வெற்றியையும் பொறுத்த்து.



ஆர்வம் உள்ளவர்கள், பெயர், முகவரி, புகைப்படம் இவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய தலைமுறை
தபால் பெட்டி எண்: 4990
சென்னை:
e -mail : messagebearers@puthiyathalaimurai.com

Puthiyathalaimurai- VIP Talks

பத்திரிகைத் துறையில், திரு. மாலன் அவர்களுக்குள்ள நீண்ட அனுபவத்தில், இப்புதிய வார இதழான ‘புதிய தலைமுறை’ வாசகர்களிடையே, பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

- ஏவி.எம்.சரவணன்,
திரைப்படத் தயாரிப்பாளர்



‘புதிய தலைமுறை’ இதழ் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடைய புதிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுதல்கள்.

- நா. மகாலிங்கம்,
தொழிலதிபர்


வெகுஜனப் பத்திரிகைகளின் பெரும் தாக்கத்தின் மத்தியில் எதிர்நீச்சல் போட வந்திருக்கும் இந்தப் புதிய முயற்சி இமாலய வெற்றிகள் பெறட்டும் என நெஞ்சார வாழ்த்துகின்றேன். தங்களது சீரிய அனுபவ முத்திரை இந்த ஜனரஞ்சக வெற்றியிலும் பெரும் பங்களிக்கும் என உறுதிபட எண்ணுகிறேன்.

- கே.பாலசந்தர்,
திரைப்பட இயக்குனர்


பெரும்பாலும் சத்தில்லாத, தரம் தாழ்ந்த பொழுதுபோக்கையே குறிக்கோளாகக் கொண்ட பத்திரிகை உலகம், வளர்ந்து வரும் சூழ்நிலையில், தாங்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் ‘புதிய தலைமுறை’ என்ற இதழை நடத்த முன்வந்திருப்பது முழுமனதுடன் வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகும். மாதிரி இதழ் சிறப்பாகவே இருக்கிறது.

- முனைவர் வா.செ.குழந்தைசாமி,
முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்



பத்திரிகைத் துறையில் பல்லாண்டு பரந்து, விரிந்த அனுபவம் கொண்டவர் நண்பர் மாலன். தமிழக, இந்திய, உலக அரசியல் மற்றும் பண்பாட்டு நிலைமைகள் பற்றிய தெளிவான பார்வையும் புரிதலும் கொண்டவர் அவர். மாலனின் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் ‘புதிய தலைமுறை’ அப்பத்திரிகையின் இலட்சியமான இளைஞர்களின் வாழ்வையும், எண்ணங்களையும் செழுமைப்படுத்தும் மேலான பணியை மிகச்சிறப்பாக செய்யும் என்றும், அப்பணியில் ‘புதிய தலைமுறை’ வெற்றியும் பெறும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.

- பிரபஞ்சன்
எழுத்தாளர்